மூன்று வயது குழந்தையின் கைக்கு கிடைத்த அந்த பொருள்., சகோதரிக்கு நேர்ந்த சோகம்
அமெரிக்காவில் மூன்று வயது குழந்தை தற்செயலாக தனது சகோதரியைச் சுட்டுக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
நான்கு வயது சிறுமி மரணம்
டெக்சாஸில் உள்ள ஹாரிஸ் கவுண்டியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று வயது சிறுமி தற்செயலாக தனது சகோதரியை துப்பாக்கியால் சுட்டார். இதில், அந்த நான்கு வயது சிறுமி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
சம்பவம் நடந்த டோம்பால் பார்க்வேக்கு அருகில் உள்ள பம்மல் நார்த் ஹூஸ்டன் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பமும் நண்பர்களுமாக ஐந்து பெரியவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவரது குழந்தைகள் தான் இவர்கள்.
abc13
அறையில் தனியாக
சிறுமிகளின் பெற்றோர் அவர்களை ஒரு அறையில் தனியாக விட்டுச் சென்றுள்ளனர், அங்குதான் மூன்று வயது சிறுமி குண்டு நிறைந்த துப்பாக்கியைக் கண்டுபிடித்துள்ளார். அதனை எடுத்து விளையாட்டாக தனது சகோதரியை நோக்கி ஒரே முறை சுட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டின் சத்தத்தை கேட்ட குடும்ப உறுப்பினர்கள், உடனடியாக குழந்தைகளிடம் சென்று துப்பாக்கியைப் பாதுகாப்பாக கைப்பற்றினர். இதையடுத்து, அவசர எண்ணான 911-க்கு அழைத்தனர்.
துப்பாக்கிச் சூடு தற்செயலாக நடந்ததாகத் தெரிகிறது. துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஏதேனும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.