பணம் சம்பாதிப்பதில் முதலிடம் வகிக்கும் 3 ராசிகள்.., யார் யார் தெரியுமா?
வேத ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்கும் ஒரு குறிப்பிட்ட குணநலன்கள் கொண்டுள்ளன.
அந்தவகையில், பணம் சம்பாதிப்பதில் முதலிடம் வகிக்கும் 3 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
மிதுனம்
புத்திசாலித்தனம், திறமை ஆகியவற்றை தரக்கூடியவர் புதன் பகவான். அவர் ஆளக்கூடிய மிதுன ராசியினர் கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாக இருப்பார்கள். அதோட பணத்தை எந்த வகையில் ஈட்ட வேண்டும் மற்றும் செலவிட வேண்டும் என்பதை சரியாக திட்டமிட்டு செயல்படுவார்கள். மேலும் பணத்தை எதிர்காலத்திற்காக சேமிப்பதில் வல்லவர்கள் என்பதால் வாழ்க்கையில் நிதி ரீதியாக வெற்றிகரமானவர்களாகவே இருப்பார்கள். இவர்கள் செய்யக்கூடிய தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக புத்திசாலித்தனமாக சிந்தித்து செயல்படுவதால் லாபத்திற்கான சூழல் அதிகமாக இருக்கும். குடும்ப வாழ்க்கையில் நிதி சார்ந்த ஆலோசனையை பிறந்த வகையில் கொடுப்பார்கள். இவர்களால் மற்றவர்களும் பயனடையக் கூடிய வகையில் செயல்படுவார்கள்.
மகரம்
மகர ராசியை சேர்ந்தவர்கள் பணம் ஈட்டுவதில் மட்டுமல்லாமல் சேமிப்பதில் சிறந்தவர்களாக இருப்பார்கள். விடாமுயற்சி, கடின உழைப்பிற்கு பெயர் பெற்றவர்கள் மகர ராசியினர். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்த ஒரு வேலையை செய்வதாக இருந்தாலும் சரியான திட்டமிடலுடன் செயல்படுவார்கள். அதனால் வெற்றி பெரிய அளவில் சாத்தியமாக இருக்கும். எந்தெந்த வழிகளில் சேமிக்கலாம், முதலீடு செய்யலாம் என சிந்தித்து செயல்படுவார்கள் என்பதால் வாழ்க்கையில், எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் அதை எளிதில் தைரியமாக இவர்களால் கடக்க முடியும்.
கும்பம்
கும்ப ராசியை சேர்ந்தவர்கள், மற்ற ராசியை விட பணம் சார்ந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள். இவர்கள் சனி தேவரை அதிபதியாகவும், அவரின் அருள் பெற்றவர்கள். இதன் காரணமாக பணத்தை ஈட்டும் விஷயத்திலும், பணத்தை சேமிக்க, பட்ஜெட் போட்டு செயல்படுவார்கள். வாழ்க்கையில் எல்லா வித விஷயங்களிலும் பொறுப்பாக செயல்படுவார்கள். முதலீடு சார்ந்த விஷயத்தில் கவனமாகவும், நிபுணர்களாகவும் செயல்படுவார்கள். இவர்களிடம் பணப்பற்றாக்குறை இருக்காது. அதனால் இவர்கள் நினைத்தது போல தொழில், வியாபாரம் என வெற்றிகரமாக செய்கின்றனர். அதன் மூலம் லாபத்தை ஈட்டுகின்றனர். சமூகத்தில் மதிப்பு, மரியாதை நிரைந்த நபர்களாக இருப்பார்கள். பிறருக்கு உதவுவதிலும் இவர்கள் சிறந்தவர்களாகத் திகழ்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |