நேற்று கடகத்தில் நுழைந்த புதன்.., பணக்கார யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், மிதுன ராசியில் பயணித்து வரும் புதன் ஆகஸ்ட் 05ஆம் திகதியான நேற்று கடக ராசிக்குள் நுழைந்துள்ளார்.
மேலும், கடக ராசியில் சூரியனுடன் சேர்ந்து புதாதித்ய ராஜயோகமும் உருவாகிறது.
அந்தவகையில், கடக ரசிக்கும் செல்லும் புதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- மாணவர்கள் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- திடீர் பண வரவு கிடைக்கும்.
- வணிகம் தொடர்பான பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.

கடகம்
- வியாபாரத்தில் முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
- வருமானம் அதிகரிக்கும்.
- நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- பணியிடத்தில் செயல்திறன் அதிகரிக்கும்.
- உயர் அதிகாரிகள் உங்கள் வேலையை பாராட்டுவார்கள்.
- சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
- நிதி நிலைமை மேம்படும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- வேலைகள் ஒவ்வொன்றும் திட்டமிட்டபடி நடக்கும்.
- பரம்பரை சொத்து தொடர்பான முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.

சிம்மம்
- அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- தொழிலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
- சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
- நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- நல்ல லாபமும் கிடைக்கும்.
- குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |