சுவாதி நட்சத்திரத்தில் புதன்.., கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்
3 zodiac get problem due to budhan peyarchi- நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
தற்போது துலாம் ராசியில் வக்ர நிலையில் பயணித்து வரும் புதன், நவம்பர் 3ஆம் திகதி அன்று புதன் வக்ர நிலையில் சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார்.
இந்த நட்சத்திரத்தில் நவம்பர் 25 ஆம் தேதி வரை புதன் பயணிக்கவுள்ளார்.
அந்தவகையில், புதனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கபோகிறார்கள்.
கடகம்
- இந்த காலகட்டம் சற்று சவாலானதாக இருக்கும்.
- பணப் பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும்.
- தேவையற்ற செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- கொடுத்த பணம் திரும்பக் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
- பணியிடத்தில் நல்ல பெயர் பெற அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.
- மாணவர்களுக்கு படிப்பில் கவனச்சிதறல் ஏற்படும்.

துலாம்
- மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- நீண்ட நாட்களாகத் தடைப்பட்ட வேலைகள் மேலும் தாமதமாகும்.
- அலுவலகத்தில் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை.
- உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
- முதலீடுகளில் இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்க வேண்டும்.
- மாணவர்களுக்கு படிப்பில் கவனச்சிதறல் ஏற்படும்.

மகரம்
- வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் பிரச்சனைகள் ஏற்படும்.
- பணியிடத்தில் தேவையற்ற பதற்றம் உருவாகும்.
- வியாபாரிகள் முதலீடுகளைச் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும்.
- அவசர முடிவுகள் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
- குடும்பத்தில் தவறான புரிதல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
- மற்றவர்களிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |