சொந்த ராசியில் வக்கிர நிவர்த்தியடையும் புதன்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.
இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், புதன் தற்போது மிதுன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். இ
தனைத்தொடர்ந்து, புதன் ஜூலை 24ஆம் திகதி தனது சொந்த ராசியான மிதுன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து பயணிக்கவுள்ளார்.
அந்தவகையில், புதனின் இந்த வக்கிர நிவர்த்தி குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு நன்மைகளை தரப்போகிறது.
மேஷம்
- தைரியம் அதிகரிக்கும்.
- உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
- தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- புதிய தொழிலை தொடங்க வாய்ப்பு தேடி வரும்.
- நிதி நிலைமை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.
- மாணவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் புதிய வேலை தேடி வரும்.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

மிதுனம்
- இந்த காலம் சிறப்பாக இருக்கும்.
- குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.
- பணியிடத்தில் செயல்திறன் பாராட்டப்படும்.
- வாழ்க்கைத் துணையுடனான உறவு முன்பை விட வலுவடையும்.
- தொழிலதிபர்கள் லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- ஐடி துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.

விருச்சிகம்
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- புதிய தொழிலை தொடங்குவதற்கு சாதகமாக இருக்கும்.
- பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- நீண்ட கால பிரச்சனைக்கு இக்காலத்தில் தீர்வு கிடைக்கும்.
- மன அழுத்தம் குறைந்து, மன நிம்மதி அதிகரிக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |