குரு- புதனால் உருவாகும் ராஜயோகம்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடிய குரு, ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
அதேபோல், நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடிய புதன், கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், குரு பகவான் வரும் ஏப்ரல் 03 ஆம் திகதி புதனுடன் சேர்ந்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்கவுள்ளார்.
இந்த ராஜயோகத்தின் போது புதனும், குரு பகவானும் ஒருவருக்கொருவர் 120 டிகிரியில் இருப்பார்கள்.
அந்தவகையில், குரு புதன் உருவாக்கும் இந்த ராஜயோகத்தினால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- நிதி நிலை அதிகரிக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
- உயர் அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்கும்.
- நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
- திருமண மற்றும் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
- வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
- மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
- போட்டி தேர்வுகளில் வெற்றியைப் பெறக்கூடும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

கடகம்
- வெளிநாடு செல்லும் கனவு நனவாகும்.
- பணிபுரிபவர்களுக்கு சிறப்பான நன்மைகள் கிடைக்கும்.
- ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- பெற்றோரின் ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல்நலம் மேம்படும்.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.

தனுசு
- துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
- கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
- அலுவலகத்தில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பார்கள்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- மேலும், பதவி உயர்வையும் பெற வாய்ப்புள்ளது.
- மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- எடுக்கும் வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |