குரு, சுக்கிரனால் உருவாகும் யோகம்.., பணமூட்டையை பெறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் மங்கள நாயகனாக விளங்கக்கூடிய குரு ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றிற்கு காரணியாக விளங்குபவர்.
அதேபோல், நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடிய சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், அடுத்த நவம்பர் மாதத்தில் குரு பகவானும், சுக்கிரனும் சேர்ந்து கேந்திர திருஷ்டி யோகத்தை உருவாக்கவுள்ளனர்.
இந்த யோகமானது நவம்பர் 03 ஆம் தேதி உருவாகவுள்ளது. இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- பணியிடத்தில் சூழல் சாதகமாக இருக்கும்.
- சமூகத்தில் அந்தஸ்தும், கௌரவமும் அதிகரிக்கும்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும்.
- வணிகர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
- நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.
- நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

தனுசு
- எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.
- நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாயப்பு கிடைக்கும்.
- நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
- எதிரிகளை வென்று வீழ்த்துவீர்கள்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவுகள் நனவாகும்.
- ஊடகம், கல்வி தொடர்பான துறையில் சாதகமாக இருக்கும்.

துலாம்
- வருமானத்தில் கணிசமான உயர்வு ஏற்படும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
- சமூகத்தில் கௌரவம் அதிகரிக்கும்.
- கூட்டு தொழிலில் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
- நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிமும்.
- குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
- நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        