சனி பகவானால் உருவாகும் தன யோகம்.., பணத்தை பெறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
சனி பகவான் தற்போது மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் சனி பகவான் 2027 ஆம் ஆண்டு வரை இருப்பார்.
அந்தவகையில், இந்த ஆண்டின் தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
2025 தீபாவளியின் போது சனி பகவான் உருவாக்கும் தன ராஜயோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- நிறைய நன்மைகளை வழங்கும்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- செல்வாக்குமிக்க நபரின் ஆதரவு கிடைக்கும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- நிதி நிலையில் அதிகரிப்பைக் காண்பீர்கள்.
- பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றின் மூலம் லாபத்தைப் பெறுவீர்கள்.
மகரம்
- தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
- வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
- நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
- எதிரிகளை வெற்றிகரமாக வீழ்த்துவீர்கள்.
- சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
மிதுனம்
- பண மழை கொட்டும்.
- தொழிலில் நல்ல வெற்றியுடன், நிதி ஆதாயங்களையும் பெறுவீர்கள்.
- நல்ல சம்பளத்துடன் வேலை தேடி வரும்.
- தொழிலதிபர்கள் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள்.
- புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.
- தந்தையுடனான உறவு மிகவும் சிறப்பாக இருக்கும்.
- நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |