அடுத்தடுத்து இடமாறும் சனி.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
அந்தவகையில், ஜூலை மாதத்தில் இருந்து டிசம்பர் வரை சனி பகவானின் நிலையில் 4 முறை மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
அதன்படி, ஜூலை 2ஆம் திகதி ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நுழைந்து பயணிக்கவுள்ளார்.
பின் ஜூலை 27ஆம் திகதி மீன ராசியில் தனது வக்ர பயணத்தை தொடங்கவுள்ளார்.
அக்டோபர் 9ஆம் திகதி வக்ர நிலையில் ரேவதி நட்சத்திரத்தில் இருந்து திரும்பி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைவார்.
மேலும், டிசம்பர் 11ஆம் திகதி வக்ர பயணம் முடிவுக்கு வந்து, வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் மீண்டும் பயணிக்கவுள்ளார்.
இந்நிலையில், இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, புதிய பொறுப்புக்கள் கிடைக்கும்.
- நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
- வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
- குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

மிதுனம்
- புதிய நம்பிக்கை வரும்.
- வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

துலாம்
- சிறப்பான ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்.
- பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
- வேலையை மாற்ற வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
- நிதி நிலைமை வழக்கத்தை விட வலுவாக இருக்கும்.
- வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு நிதி நன்மைகளும் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |