ஒன்றிணையும் செவ்வாய்- சுக்கிரன்.., அடுத்த மாதம் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்
நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார்.
செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அதேபோல், நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடிய சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், இந்த இரண்டு கிரகங்களும் நவம்பர் மாதத்தில் விருச்சிக ராசியில் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர்.
இவ்விரு கிரகங்களின் சேர்க்கை சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நிகழ்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
கும்பம்
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- பல புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும்.
- புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- முதலீடுகளிலிருந்து எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்பு, பதவி உயர்வுகள் கிடைக்கும்.
- உயர் அதிகாரிகள் செயல்திறனை பாராட்டுவார்கள்.
- பங்குச் சந்தை, லாட்டரியில் நல்ல லாபத்தைப் பெறக்கூடும்.
விருச்சிகம்
- தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
- வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
- வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
- திட்டமிட்ட வேலைகள் சரியாக முடியும்.
- இக்காலத்தில் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும்.
- திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் கனவு நனவாகும்.
மீனம்
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
- வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |