சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
அதேபோல், நவக்கிரகங்களில் அமங்கல நாயகனாக விளங்கும் கேது எப்போதும் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருப்பார்.
இந்நிலையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார்.
அதே வேளையில் இந்த சிம்ம ராசியில் ஏற்கனவே கேது பயணித்து வருகிறார்.
இதனால் இந்த சூரிய பெயர்ச்சியால் சிம்ம ராசியில் சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் சூரியன்-கேது சேர்க்கை நிகழவுள்ளது.
அந்தவகையில், சூரியன் மற்றும் கேதுவின் இந்த இணைவால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிக பலன்களை பெறப்போகின்றனர்.
சிம்மம்
- நிதி நிலை நன்றாக இருக்கும்.
- குடும்ப வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் கிடைக்கும்.
- நிலுவையில் உள்ள பணம் திரும்பக் கிடைக்கும்.
- முதலீடுகள் பெரிய லாபத்தைக் கொடுக்கும்.
- பொருளாதார நிலை வலுவடையும்.
- வேலையை மாற்ற இக்காலம் சரியாக இருக்கும்.
- இக்காலகட்டத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.
- குடும்பத்தில் அமைதியும் நல்லிணக்கமும் நிலவும்.
- பூர்வீகச் சொத்து மூலம் ஆதாயம் கிடைக்கும்.

கன்னி
- சாதகமானப் பலன்களை அளிக்கும்.
- அவர்களின் நற்பெயரை மேலும் உயர்த்தும்.
- சுற்றியுள்ளவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள்.
- வியாபாரத்தில் முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வீர்கள்.
- தொழிலை விரிவுபடுத்துவதற்கு இது மிகச்சிறந்த காலம்.
- அவர்களின் பொருளாதார நிலை மேம்படும்.
- நிதி நிலையில் முன்னேற்றம் கிடைக்கும்.

மகரம்
- நேர்மறையான பலன்களை ஏற்படுத்தும்.
- நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.
- அனைத்து முயற்சிகளிலும் அதிர்ஷ்டம் துணை நிற்கும்.
- வேலையில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் உண்டாகும்.
- காதல் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் அடைவார்கள்.
- இக்காலத்தில் சாதனைகளை செய்வார்கள்.
- வணிகத்தில் அதிகளவு லாபம் உண்டாகும்.
- வாழ்க்கையில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |