சுவாதி நட்சத்திரத்தில் சூரியன்.., சிக்கல்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில், அக்டோபர் 24 அன்று, ராகுவால் ஆளப்படும் சுவாதி நட்சத்திரத்திற்குள் சூரியன் நுழையவுள்ளார்.
மேலும், நவம்பர் 6ஆம் திகதி மாலை 4 மணி வரை சூரியன் சுவாதி நட்சத்திரத்தில் நிலைத்திருப்பார்.
அந்தவகையில், ராகுவின் சுவாதி நட்சத்திரத்திற்கு சூரியன் செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் சிக்கல்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
- பணியிடத்தில் சவால்களும் வேலைப்பளுவும் அதிகரிக்கும்.
- குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலைகளை முடிப்பதில் சிரமம் ஏற்படும்.
- வியாபாரத்தில் லாபத்தைவிட நஷ்டம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- எதிர்பாராத நிதி இழப்புகளைச் சந்திக்க நேரிடும்.
- அலுவலகப் பணிகளையும் நிதி சார்ந்த முடிவுகளையும் கவனமாகக் கையாள வேண்டும்.

கடகம்
- பணிச்சுமையும் மன அழுத்தமும் அதிகரிக்கும்.
- தன்னம்பிக்கை குறைய வாய்ப்புள்ளது.
- தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் ஏற்படும்.
- மன உளைச்சல் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
- ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
- எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

தனுசு
- எதிர்பார்த்த முடிவுகளை அடைவதில் தாமதம் ஏற்படும்.
- குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
- வெளிநாடு தொடர்பான வேலைகள் மற்றும் வியாபாரங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
- மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படும்.
- காதல் வாழ்க்கையில் நிதானமாகச் செயல்பட வேண்டும்.
- பயணங்களை திட்டமிடும்போது கவனமாக முடிவெடுக்க வேண்டும்.
- வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |