ஒரே நாளில் பெயர்ச்சியாகும் சூரியன்- சுக்கிரன்.., பணக்காரராக மாறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
அதேபோல், நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், சூரியனும், சுக்கிரனும் ஜூன் 08ஆம் தேதி ஒரே நாளில் நிலையை மாற்றவுள்ளன.
இந்த மாற்றத்தின் போது சூரியன் மிருகசீரிட நட்சத்திரத்திற்கும், சுக்கிரன் கடக ராசிக்கும் செல்லவுள்ளனர்.
அந்தவகையில், ஒரே நாளில் பெயர்ச்சியாகும் சூரியன்- சுக்கிரனால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
கடகம்
- இதன்மூலம் ஆளுமை மேம்படும்.
- பணியிடத்தில் வேலையால் மற்றவர்களை ஈர்ப்பீர்கள்.
- மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- மேலும், அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் கிடைக்கும்.
- படைப்பாற்றல் சிறப்பாக இருக்கும்.
- தொழிலில் பெரிய அளவில் லாபத்தைக் காண்பீர்கள்.
- பண வரவு அதிகரிக்கும்.
- ஆடம்பர வாழ்க்கையை வாழ்வீர்கள்.

சிம்மம்
- புதிய வருமான வழிகள் திறக்கும்.
- சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
- முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும்.
- ஆடம்பர பொருட்களுக்கு அதிக செலவு செய்வீர்கள்.
- நிதி நிலைமை நன்றாக இருக்கும்.
- நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
- வெளிநாட்டுடன் தொடர்புடைய தொழிலில் லாபம் கிடைக்கும்.
- தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
- வெற்றியையும், லாபத்தையும் காண்பீர்கள்.

கன்னி
- நிதி நிலைமை வலுவடையும்.
- நிலுவையில் உள்ள திட்டங்கள் வெற்றிகரமாக நடக்கும்.
- நல்ல நிதி ஆதாயங்கள் கிடக்கும்.
- வேலை மற்றும் தொழிலில் லாபம் கிடைக்கும்.
- உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
- சமூக வட்டம் விரிவடையும்.
- செல்வாக்குமிக்க நபர்களின் நட்பு கிடைக்கும்.
- எதிர்காலத்தில் நல்ல ஆதாயத்தைப் பெறக்கூடும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |