ஒரே மாதத்தில் 3 முறை நடக்கும் சூரிய பெயர்ச்சி.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்
நவகிரங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
சூரியன் தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்த கடக ராசியில் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை இருப்பார்.
அதன் பின் தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்கு நுழைவார். இது தவிர சூரியன் ஆகஸ்ட் மாதத்தில் 2 முறை நட்சத்திரத்தையும் மாற்றவுள்ளார்.
அதில் ஆகஸ்ட் 3ஆம் தேதி சூரியன் ஆயில்யம் நட்சத்திரத்திற்கும், ஆகஸ்ட் 30ஆம் தேதி பூரம் நட்சத்திரத்திற்கும் செல்லவுள்ளார்.
இப்படி ஒரே மாதத்தில் சூரியன் 3 முறை தனது நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் தாக்கம் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தெரியும்.
துலாம்
- வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
- காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
- நிதி நிலை சிறப்பாக இருக்கும்.
- பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றின் மூலம் நிறைய பணம் கிடைக்கும்.
விருச்சிகம்
- வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும்.
- ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- தொழிலதிபர்கள் தங்கள் எதிரிகளை எளிதில் வெற்றி பெறுவார்கள்.
- வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.
- உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
- தந்தையுடனான உறவு வலுவடையும்.
சிம்மம்
- அதிர்ஷ்டமாக இருக்கும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- அலுவலகத்தில் செயல்திறன் மேம்படும்.
- தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
- வணிகர்களுக்கு வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- ஆரோக்கியம் மேம்படும்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |