ஒரே நேரத்தில் வக்ரமடையும் சனி, புதன்.., துன்பங்களை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஜூலை 13, 2025 அன்று, மீன ராசியில் சனிபகவான் 07:24 மணிக்கு வக்ரமாகிறார். நவம்பர் 28, 2025 வரை அதே நிலையில் நீடிப்பார்.
அதேபோல ஜூலை 18 அன்று, கடக ராசியில் புதன் 09:45 மணிக்கு வக்ரமாகிறது. அது ஆகஸ்ட் 11, 2025 வரை அந்த நிலையில் இருப்பார்.
இந்த இரண்டு கிரகங்களும் வக்ரமடைவதால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமான காலத்தை வழங்கப்போகிறது.
துலாம்
- தொழில் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- மேலும் அலுவலகத்தில் வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்ப்பது நல்லது.
- குடும்ப வாழ்க்கையில், விரிசல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
- வாழ்க்கைத்துணையுடன் ஏற்படும் சிக்கல்களை பொறுமையாகக் கையாள வேண்டும்.
- அலுவலகத்தில் வேலையை முடிப்பதில் தாமதங்கள் ஏற்படலாம்.
- பெரிய திட்டங்களை தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
- தங்கள் வேலையில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
- மாணவர்கள் படிப்பில் சில பின்னடைவுகளை சந்திக்க நேரிடும்.
- சில உடல்நல பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
- தொழில் வாழ்க்கையில் புதிய திட்டங்களைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
- பிரச்சினைகளைத் தவிர்க்க நண்பர்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்.
- காதல் வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
- எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் ஆலோசனைகளை கேட்பது நல்லது.
- ஆரோக்கியத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கும்பம்
- தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும்.
- லாபத்திற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது.
- பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.
- கலந்தாலோசித்து எந்தவொரு முடிவையும் எடுப்பது நல்லது.
- வேலையில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.
- கடினமாக உழைக்க தயாராக இருக்க வேண்டும்.
- ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |