சனி- சூரியனின் சேர்க்கை.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
அதேபோல், நவகிரங்களின் அரசனான சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணியாக இருப்பவர்.
இந்நிலையில், தற்போது சூரியன் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.
சிம்ம ராசியில் நுழைந்துள்ள சூரியன் ஆகஸ்ட் 23ஆம் திகதி ஷடாஷ்டக யோகத்தை உருவாக்கவுள்ளார்.
இந்த யோகத்தின் போது சூரியனும், சனியும் ஒருவருக்கொருவர் 150 டிகிரியில் இருப்பதால் குறிப்பிட்ட 3 ராசிகள் துன்பங்களை சந்திக்க நேரிடும்.
மிதுனம்
- இக்காலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
- பயணங்களில் உடைமைகளை கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
- குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும்.
- பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.
- வேலையில் கவனம் செலுத்த முடியாது.
- இக்காலத்தில் யாருடைய ஆதரவும் கிடைக்காது.
- ஆரோக்கியமும் பாதிக்கப்படலாம்.
- வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
- வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- ஒவ்வொரு வேலையிலும் தடைகள் ஏற்படும்.
- இக்காலத்தில் சிரமங்கள் அதிகரிக்கலாம்.
- மிகுந்த மன அழுத்தத்தை சந்திக்க நேரிடும்.
- அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்காது.
- சிறு வெற்றியைப் பெறவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
- நண்பர்களுடனான உறவு மோசமடையும்.
- திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும்.
மீனம்
- இக்காலம் கொஞ்சம் மோசமாக இருக்கும்.
- வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்காது.
- தன்னம்பிக்கையில் குறைவு ஏற்படும்.
- எதிரிகள் உங்களை விட வலுவாக இருப்பார்கள்.
- தொழில் ரீதியாக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
- ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
- பண விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
- அனைத்து வேலையையும் யோசித்து எடுக்கவும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |