சனி வக்ர பெயர்ச்சி.., ஏழரையில் சிக்கப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
இவர் நீதி, நேர்மை, ஒழுக்கம், கடின உழைப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
இந்நிலையில், சனி பகவான் 2026ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் திகதி அன்று மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்குவார்.
அந்தவகையில், சனி வக்ர பெயர்ச்சி குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு ஏழரை சனி நடக்கும் என்று சொல்லப்படுகிறது.
மேஷம்
- தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.
- மனநிலையும் மோசமாக பாதிக்கப்படும்.
- முடிவை எடுக்க முடியாமல் குழப்பமடையக்கூடும்.
- அவசரப்பட்டு எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
- வேலைகளில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
- நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- புதிய முதலீடுகளையும் தவிர்க்க வேண்டும்.
- ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம்
- நிதி நிலைமை சற்று ஏற்றஇறக்கத்துடன் இருக்கும்.
- நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- பண பரிவர்த்தனைகளை செய்யும்போது எச்சரிக்கை தேவை.
- கடன் கொடுப்பதை, வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
- எதையும் சரியாகவும் ஒழுக்கமாகவும் செய்ய வேண்டும்.
- ஆரோக்கிய விஷயத்தை புறக்கணிப்பதை தவிர்க்க வேண்டும்.

மீனம்
- பொறுப்புக்களும், மன அழுத்தமும் அதிகரிக்கும்.
- வேலைகளை முடிக்க கடினமாக இருக்கலாம்.
- பழைய பிரச்சனைகள் மீண்டும் தலைத்தூக்கும்.
- பணிகளை பாதியாக செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
- எந்த வேலையையும் முழுமையாக செய்து முடிக்க வேண்டும்.
- பேச்சையும், கோபத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்.
- வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |