சனியின் சேர்க்கை.., 2025ல் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய 3 ராசிகள்
நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.
சனி பகவான் தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் நிலையில், 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீன ராசிக்கும் செல்வார்.
அதேபோல், நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.
இவர் டிசம்பர் 28ஆம் திகதி இரவு 11:28 மணிக்கு சுக்கிரன் கும்ப ராசிக்குள் நுழைகிறார்.
இந்நிலையில், ஏற்கனவே சனி கும்ப ராசியில் இருப்பதால், சனி சுக்கிரன் இணைவு உருவாகும்.
இதன் காரணமாக 2025 புத்தாண்டில் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கன்னி
தேவையற்ற செலவுகளை சந்திக்க நேரிடும். இது அவர்களை சிக்கலில் தள்ளக் கூடும். மேலும், விருப்பங்கள் நிறைவேறாததால் மன அழுத்தம் ஏற்படலாம். பொருளாதார நிலையிலும் பாதகமான தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில், உடல்நலம் மீது அதிக கவனம் செலுத்துவதும் நல்லது.
தனுசு
தேவையற்ற செலவுகளால் சிரமப்படுவார்கள். இது மட்டுமின்றி, கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொறுமையையும் அமைதியையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.
மீனம்
பிரச்சனைகள் அதிகரிக்கும். பொருளாதார நிலை சற்று மோசமாகும். தொழில் அல்லது வேலையில் எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் கவனமாக சிந்தியுங்கள், இல்லையெனில் நஷ்டம் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் பயணத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மறக்காதீர்கள். குடும்பத்தில் சிறிய அளவில் சண்டை சச்சர்வுகள் இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |