மிதுனத்தில் ஏறும் குரு.., கொட்டும் பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள்
குருபகவான் நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர்.
இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார்.
குரு பகவான் அடுத்த வருடம் மே மாதம் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்குள் நுழைகிறார்.
இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் செல்வ செழிப்புடன் வாழப்போகின்றனர்.
துலாம்
குரு பகவானின் பெயர்ச்சி துலாம் ராசியினரின் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளார். துலாம் ராசியினரின் வாழ்வில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெற்றி வாய்ப்புகள் துலாம் ராசியினரை தேடி வரும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மேஷம்
மேஷ ராசியினரின் வாழ்க்கையில் பல்வேறு விதமான சாதனைகள் ஏற்படும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு மேஷ ராசியினரின் வாழ்வில் முழுமையாக இருக்கும். மேஷ ராசியினரின் மூன்றாவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்ய இருப்பதால் 2025 ஆம் ஆண்டு முன்னேற்றமான ஆண்டாக அமையும். உடன் பிறந்தவர்களின் உதவி முழுமையாக கிடைக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலை விரிவு படுத்தக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். சேமிப்பு அதிகரிக்க கூடும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
மீனம்
குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய மாற்றங்கள் தேடி வரும். வாழ்க்கையில் அதிர்ஷ்டம் மற்றும் வளம் பெருகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் அனைத்திற்கும் சாதகமான தீர்வு கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் மூலம் வருமானம் அதிகரிக்கும். வணிகத்தில் அதிக லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |