பெண்களே! 30 வயதாகி விட்டதா? கட்டாயம் இந்த பரிசோதனைகளை செய்து விடுங்க
உடல்நலப் பரிசோதனைகள் எதிர்காலத்தில் வரவிருக்கும் நோய்கள் பற்றி அறிந்து கொள்ளவும், அதற்கேற்ப உங்கள் சிகிச்சையைத் திட்டமிடவும் உதவும்.
ஆரோக்கியமான மற்றும் கட்டுக்கோப்பான உடலைப் பராமரிப்பதற்கான எளிதான வழி, சுகாதார பரிசோதனைகள் மூலம் உங்கள் உடலின் ஆரோக்கியத்தை தொடர்ந்து கண்காணிப்பதாகும்.
30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது தங்கள் முழு உடல் ஆரோக்கிய பரிசோதனையை கட்டாயமாக செய்து கொள்ள வேண்டும்.
என்ன தான் சிறந்த உணவு முறையை பின்பற்றி வந்தாலும், 30 வயதை தாண்டி விட்டாலே போதும் உடல் ரீதியான பிரச்சினைகள் மாறி மாறி வந்துக்கொண்டே இருக்கும்.
ஆகவே 30 வயதை தாண்டிய பெண்கள் என்ன மாதிரியாக பரிசோதனைகளை அடிக்கடி செய்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
நீரிழிவு நோய் பரிசோதனை
நீரிழவு நோயானது பலருக்கும் இருக்கக்கூடிய ஒரு நோயாகும். உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம். ஆனாலும் முன்னாயத்தமாக நோய்க்கான பரிசோதனையை செய்துக்கொள்வது நல்லது.
புற்றுநோய் பரிசோதனை
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பல பெண்களை பாதிக்கிறது மற்றும் ஒவ்வொரு ஆண்டும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இந்த புற்றுநோயால் இறப்பை எதிர்கொள்கின்றனர். Pap Smear என்பது புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் சோதனையாகும். இதை கட்டாயம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
இதயநோய் பரிசோதனை
இதய நோயானது வயது வேறுபாடின்றி வரக்கூடிய ஒரு நோயாகும். ரத்த அழுத்தம், ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவு, கொலஸ்ட்ரால் அளவு ஆகியவற்றை ஒரு வருடங்களுக்கு ஒரு முறை கட்டாயம் 30 வயதை தாண்டியவர்கள் பரிசோதிக்க வேண்டும்.
தைராய்டு தூண்டும் ஹார்மோன் (TSH)
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை உறுதிப்படுத்த TSH சோதனை முக்கியமானது. தைராய்டு சுரப்பியின் செயல்பாடு முடி உதிர்தல், மன அழுத்தம் மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற அறிகுறிகளைக் காட்டலாம். ஆகவே கட்டாயம் இந்த பரிசோதனையை செய்துக்கொள்ள வேண்டும்.
Mammogram பரிசோதனை
Mammogram என்பது மார்பக திசுக்களின் டிஜிட்டல் எக்ஸ்ரே ஆகும். இது 30 வயதிற்குட்பட்ட அனைத்து பெண்களுக்கும் செய்ய வேண்டும். மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |