RBI UDGAM Portal: மக்களுக்கு உதவ முன்வந்துள்ள 30 வங்கிகள்
வங்கிகளில் உரிமை கோரப்படாத டெபாசிட்களை டெபாசிட்தாரர்கள் அல்லது அவர்களது வாரிசுகளுக்கு வழங்க புதிய போர்ட்டலை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
நாம் அல்லது நம்முடன் தொடர்புடைய நபர்கள் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்திருப்போம். காலப்போக்கில், அந்த வைப்புகளின் விவரங்களை மறந்துபோயிருப்போம். மேலும் சில சிறப்பு சந்தர்ப்பங்களில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் தொடர்பான ஆவணங்களை இழந்திருப்போம். இதுபோன்ற பல கோடி ரூபாய் டெபாசிட்கள் வங்கிகளில் கிடக்கின்றன.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி டெபாசிட்தாரர்கள் அல்லது அவர்களது வாரிசுகளுக்கு உரிமை கோரப்படாத டெபாசிட்களை வழங்க புதிய போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது. RBI ஆகஸ்ட் 17 அன்று UDGAM என்ற போர்ட்டலை அறிமுகப்படுத்தியது. ஆனால் ஆரம்பத்தில் சில வங்கிகள் மட்டுமே RBI UDGAM போர்ட்டலில் பதிவு செய்ய முன் வந்தன.
UDGAM போர்ட்டலின் பிரபலத்தைக் கருத்தில் கொண்டு, RBI-ன் அறிவுறுத்தலின்படி UDGAM போர்ட்டல் மூலம் உரிமை கோரப்படாத டெபாசிட்களை செலுத்த பல வங்கிகள் இப்போது முன் வந்துள்ளன.
டெபாசிட்களை சரிபார்க்க பல வங்கிகளுக்குச் செல்லாமல் ஒரே இடத்தில் டெபாசிட்களைச் சரிபார்க்கும் வாய்ப்பு இருப்பதால் மக்கள் இந்தச் சேவையை அதிகளவில் பயன்படுத்த முன்வருகின்றனர்.
அக்டோபர் 15-ஆம் திகதிக்குள் UDGAM போர்ட்டல் மூலம் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளின் கோரப்படாத டெபாசிட்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக RBI வட்டாரங்கள் கூறுகின்றன. RBI UDGM போர்ட்டல் மூலம் எந்தெந்த வங்கிகள் கோரப்படாத டெபாசிட்களைக் கண்டறியலாம்? என்பதை நாம் இங்கே தெரிந்துகொள்ளலாம்.
UDGAM போர்ட்டல் மூலம் சேவை வழங்கும் வங்கிகள்
- State Bank of India
- Punjab National Bank
- Central Bank of India
- Dhanlaxmi Bank Ltd.
- South India Bank Ltd.
- DBS Bank Ltd.
- City Bank
- Canara Bank
- Bank of India
- Bank of Baroda
- Indian Bank
- Union Bank of India
- HDFC Bank
- Federal Bank
- Kotak Mahindra Bank
- ICICI Bank
- UCO Bank
- Bank of Maharashtra
- IDBI Bank
- JAMMU AND KASHMIR BANK LIMITED
- Punjab and Sindh Bank
- Axis Bank Ltd.
- Indian Overseas Bank
- Standard Chartered Bank
- HSBC Limited
- Karnataka Bank Ltd.
- Karur Vysya Bank Ltd.
- Saraswat Co-operative Bank Ltd.
- Indus Ind Bank Ltd.
- Tamil Nadu Mercantile Bank Ltd.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |