மேக்ரான் இடத்தைப் பிடிக்க 30 பேர் போட்டி
Macron’s successor race heats up as 30 candidates eye France’s top job: பிரான்ஸ் ஜனாதிபதியின் இடத்துக்கான போட்டியில் 30 பேர் வரை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானின் பதவிக்காலம் இன்னும் ஐந்து மாதங்களில் நிறைவடைய உள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் 30 பேர் வரை இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேக்ரான் இடத்துக்கு 30 பேர் போட்டி
ஜனாதிபதி போட்டியில் முன்னணியில் இருக்கும் வேட்பாளர், தீவிர வலது சாரியினரான மரீன் லெ பென். அவருக்குத்தான் அடுத்து ஜனாதிபதியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கருத்துக்கணிப்புகளும் தெரிவிக்கின்றன.

அதைத் தொடர்ந்து, தீவிர இடதுசாரித் தலைவரான ஜீன்-லூக் மெலென்சோன் இருக்கிறார், இவர்கள் இருவரும்தான் தேர்தலின் இரண்டாவது சுற்றில் நேருக்கு நேர் மோதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், திடீரென, ஒலிம்பிக் போட்டிகளில், ஜூடோ விளையாட்டில் சேம்பியன் பட்டம் பெற்றவரான டெடி ரைனர் (Teddy Riner, 37), என்பவர், பிரான்ஸ் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார்.

அத்துடன், முன்னாள் பிரதமர்களான எடுவா பிலிப்பி, கேப்ரியல் அட்டால் ஆகியோரும் போட்டியில் இருக்கிறார்கள்.
இவர்கள் போக, மக்களுக்கு அதிகம் தெரியாதவரான, கேன்ஸ் மேயரான டேவிட் (David Lisnard), ரபேல் (Raphael Glucksmann) உட்பட சுமார் 30 பேர் ஜனாதிபதி போட்டியில் இருக்கிறார்கள்.
ஆனால், அவர்களில் பலர் போட்டியிலிருந்து விலகிவிடுவார்கள் என்று கூறும் வரலாற்றாளரான டேமியன் போல் என்பவர், பிரான்ஸ் மக்களில் பெரும்பாலானவர்களுக்கு, யாருக்கு வாக்களிப்பது என்று தெரியவில்லை என்றும், அதிக ஆதரவு மரீன் லெ பென்னுக்குத்தான் என்றும் கூறுகிறார்.
அத்துடன், மரீன் லெ பென்னுக்கு இப்போது இருக்கும் ஆதரவே, அவர் வெற்றி பெறுவதற்கு போதுமானது என்று கூறும் எர்வான் (Erwan Lestrohan) என்னும் வரலாற்றாளர், அவரது எதிரணியினர் தங்களுக்குள் பிரிந்து கிடப்பதே அவருக்கு சதாகமாக அமையக்கூடும் என்கிறார்.