அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது... நாடுகடத்தும் நடைமுறைகள் துவக்கம்
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களை நாடுகடத்தும் நடைமுறைகள் துவக்கப்பட்டுள்ளன.
30 இந்தியர்கள் கைது...
அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லை பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், மே மாதம் 11ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையிலான வாரத்தில், எல்லை ரோந்து அதிகாரிகள் ஆபரேஷன் செக்மேட் என்னும் நடவடிக்கையின்போது அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 52 பேரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் 36 பேர் ட்ரக் சாரதிகளாக பணிபுரிந்துவந்துள்ளார்கள். அந்த 36 பேரில் 30 பேர் இந்தியர்கள்.
கைது செய்யப்பட்டவர்களில் பலர் ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது பெற்ற பணி ஆவணங்களை வைத்துள்ளார்கள்.
அவை ஏற்கனவே காலாவதியாகிவிட்டன. சிலரிடம் ஓட்டுநர் உரிமங்களே இல்லை! கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் விரைவில் நாடுகடத்தப்பட உள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |