75 வயது முதியவரை காதல் திருமணம் செய்ய உள்ள 30 வயது யூடியூபர்
30 year old youtuber to marry 75 old men: 30 வயது யூடியூபர் ஒருவர், 75 வயது முதியவரை காதல் திருமணம் செய்ய உள்ளது சமூக ஊடகங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
75 வயது முதியவரை திருமணம் செய்யும் 30 வயது யூடியூபர்
உத்தரப் பிரதேச மாநிலம், அவுரையா மாவட்டம், சஹார் வட்டாரத்தில் உள்ள அரியாரி கிராமத்தைச் சேர்ந்தவர் 75 வயதான ராம்சுகர்.
சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி காலமான நிலையில், யூடியூபரான அவருடைய மகள் ராதாவுடன் வசித்து வந்துள்ளார்.

ராதாவை பார்த்து அவருடன் இணைந்து வீடியோ எடுக்க சக யூடியூபரான ராணி ராஜ்புத் அடிக்கடி அவரது வீட்டிற்கு வர தொடங்கியுள்ளார்.
இந்த காலகட்டத்தில், 75 வயதான ராம்சுகர் மற்றும் 30 வயதான ராணி ராஜ்புத்திற்கு இடையே உரையாடல்கள் தொடங்கி, அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
45 வயது வித்தியாசமுள்ள இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில், நவராத்திரி முடிந்த பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இவர்களின் நிச்சயதார்த்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆன நிலையில், பயனர்கள் சிலர் அவர்களின் வாழ்க்கையை வாழ அவர்களுக்கு உரிமை உண்டு, காதலுக்கு வயது தடையில்லை எனவும், சிலர் அப்பா வயது ஆணுடன் எப்படி திருமணம் என வயது வித்தியாசத்தை கேள்வி எழுப்பி வருகின்றனர்.