கிரிக்கெட் விளையாடிய இளைஞர் மைதானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழப்பு: என்ன நடந்தது?
உத்தரப் பிரதேசத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த 30 வயது இளைஞர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டின் போது உயிரிழந்த இளைஞர்
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணிபுரியும் 30 வயது இளைஞர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென மைதானத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை காலை நடைபெற்ற இந்த சம்பத்தில் உயிரிழந்தவர் ரவீந்திர அஹிர்வார்(Ravindra Ahi) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?
ரவீந்திர அஹிர்வார் தனது நண்பர்களுடன் ஜான்சியில் உள்ள கல்லூரி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டு இருந்துள்ளார்.
அப்போது சில ஓவர்கள் பந்து வீசி விட்டு தண்ணீர் குடித்த நிலையில், சிறிது நேரத்தில் அவர் வாந்தி எடுத்ததோடு மைதானத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து அவரது நண்பர்கள் உடனடியாக அருகில் உள்ள மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரியில் ரவீந்திர அஹிர்வாரை சேர்த்துள்ளனர்.
ஆனால் அங்கு ரவீந்திர அஹிர்வாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் தெரிவித்த தகவலில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர். இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பிறகே சரியான காரணம் தெரியவரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |