சொகுசுக்கப்பலில் பயணித்த 300 பேருக்கு மர்ம நோய்
அமெரிக்க சொகுசுக்கப்பல் ஒன்றில் பயணித்த 300க்கும் அதிகமானவர்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
300க்கும் அதிகமானவர்கள் மர்ம நோயால் பாதிப்பு
அமெரிக்காவின் டெக்சாசிலிருந்து மெக்சிகோவரை சென்று திரும்பும் Ruby Princess என்னும் சொகுசுக்கப்பலில், பிப்ரவரி 26 முதல் மார்ச் 5 வரையிலான காலகட்டத்தில் 2,991 பயணிகளும், 1,159 பணியாளர்களும் பயணித்துள்ளனர்.
அப்போது, 284 பயணிகள் மற்றும் 34 பணியாளர்கள் மர்ம நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Galveston/Facebook
அவர்களுக்கு கடுமையான வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க நோய்த்தடுப்பு மைய அதிகாரிகள் அந்த கப்பலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். என்றாலும், எதனால் அந்த வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது என்பதுஇதுவரை தெரியவரவில்லை. பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பட்டுள்ள நிலையில், அது நோரா வைரஸ் என்னும் கிருமியால் ஏற்பட்ட தொற்றாக இருக்கலாம் என கருதப்படுகிறது.