ரூ.30,000 கோடி கேட்கும் நிதிஷ்குமார்.., ரூ.1 லட்சம் கோடி கேட்கும் சந்திரபாபு நாயுடு: பட்ஜெட்டில் ஒதுக்க நெருக்கடி
2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் ஜூலை 23 -ம் திகதி தாக்கல் செய்யவுள்ள நிலையில் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக தகவல் வந்துள்ளது.
மத்திய பட்ஜெட்
2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வரும் ஜூலை 23 -ம் திகதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
வரும் ஜூலை 22 -ம் திகதி முதல் ஆகஸ்ட் 12 -ம் திகதி வரை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
முன்னதாக, நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்தியாவுக்கு மூன்றாவது முறையாக மோடி பிரதமரான பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும்.
நெருக்கடி தரும் தலைவர்கள்
இந்நிலையில், பீகார் மாநில திட்டங்களுக்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.30,000 கோடியை ஒதுக்க வேண்டும் என்று நிதிஷ்குமார் மத்திய அரசுக்கு நெருக்கடி தருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்மையில் நிர்மலா சீதாராமனை சந்தித்த நிதிஷ்குமார், இந்த கோரிக்கையை கூறியதாக சொல்லப்படுகிறது.
அதேபோல, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அம்மாநில திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைத்து மோடி மீண்டும் பிரதமர் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் இவர்கள் இருவரும் வைத்த கோரிக்கை மத்திய பட்ஜெட்டில் கவனத்தை பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |