ரூ 30,000 கோடி சொத்து... திடீரென்று இறந்த தொழிலதிபர்: தாயார் எழுப்பும் சந்தேகம்
மறைந்த தொழிலதிபர் சஞ்சய் கபூரின் தாயார் ராணி கபூர், ஜூன் மாதம் தொழிலதிபரின் திடீர் மரணத்திற்குப் பிறகு ரூ.30,000 கோடி சொத்து சம்பந்தப்பட்ட ஒரு குடும்ப விவகாரத்தில் சிக்கியுள்ளார்.
ராணி எழுதிய கடிதம்
குருகிராம் பகுதியில் அமைந்துள்ள ஆட்டோமொடிவ் தொழில்நுட்ப நிறுவனமான சோனா காம்ஸ்டாரில் 2019 முதல் சஞ்சய் தலைவராக செயல்பட்டு வந்துள்ளார்.
சோனா காம்ஸ்டார் நிர்வாகத்திற்கு ராணி எழுதிய கடிதம், வற்புறுத்தல் மற்றும் ஆவணங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததைத் தொடர்ந்து, அவரது சொத்து தொடர்பான சர்ச்சை பொதுமக்களின் பார்வைக்கு வந்தது.
ஒரு அறிக்கையில், நாடுகடந்த சதியின் ஒரு பகுதியாக தனது மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ராணி கபூர் குறிப்பிட்டுள்ளார். சோனா குழுமத்தின் நிறுவனரான மறைந்த சுரீந்தர் கபூரின் மனைவி இந்த ராணி கபூர்.
1983 ஆம் ஆண்டு ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான சுசுகி தனது சிறிய காரை உள்ளூரில் தயாரிக்க முடிவு செய்த பிறகு, இந்தியாவின் ஆட்டோ உதிரிபாகங்கள் துறையை அமைப்பதில் சுரிந்தர் முக்கிய பங்கு வகித்தார்.
மாரடைப்பு
2015ல் சுரிந்தர் கபூர் இறந்த பிறகு, சஞ்சய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றார், அதே நேரத்தில் ராணி அதன் தலைவராக பணியாற்ற முடிவு செய்தார். மட்டுமின்றி, சுரிந்தரின் மொத்த சொத்துக்களின் ஒரே பயனாளி தாம் என்றும் அவர் கூறி வருகிறார்.
ஜூன் 12ம் திகதி லண்டனில் போலோ விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு சஞ்சய் கபூர் இறந்தார். சஞ்சய் முன்னர் திரைப்பட நடிகை கரிஷ்மா கபூரை மணந்தார், இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கரிஷ்மா கபூருடனான விவாகரத்துக்கு பின்னர் சஞ்சய் பிரியா சச்தேவை மணந்தார். இதனிடையே, சஞ்சய் திடீர் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிராகரித்து, அவரது மரணம் இயற்கையான காரணங்களால் ஏற்பட்டதாக லண்டன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |