சுவிட்சர்லாந்தில் 30,500 செவிலியர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை: ஆனால்...
சுவிட்சர்லாந்தில், 2030வாக்கில் செவிலியர் துறையில் 30,500 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுவார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.
30,500 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை
சுவிட்சர்லாந்தில், செவிலியர் துறையில் ஏற்கனவே பணியாளர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், 2030ஆம் ஆண்டில், செவிலியர் பற்றாக்குறை அதிகரிக்கும் என சுவிஸ் சுகாதார கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், மருத்துவமனைகளில் செவிலியர் பற்றாக்குறை 14 சதவிகிதமும், முதியோரை கவனித்துக்கொள்ளும் அமைப்புகளில் 26 சதவிகிதமும், சுகாதார மையங்களில் 19 சதவிகிதமும் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
விடயம் என்னவென்றால், சுவிட்சர்லாந்தில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய தடையில்லா வர்த்தக கூட்டமைப்பு நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே செவிலியர் பணிக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.
பல்வேறு மருத்துவம் சார்ந்த அமைப்புகள் அந்த விதியை மாற்றவேண்டும் என குரல் கொடுத்தும், சுவிஸ் அரசு அசைந்துகொடுப்பது போல் தெரியவில்லை.

இந்நிலையில், இந்த தகவல் உண்மையானது அல்ல சில தகவல்கள் கூறுகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய தடையில்லா வர்த்தக கூட்டமைப்பு நாடுகளைச் சேராத, அதாவது, மூன்றாம் நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளைச் சேர்ந்தவர்களும் செவிலியர் பணிக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும், என்றாலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய தடையில்லா வர்த்தக கூட்டமைப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன.
மேலும், மூன்றாம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் செவிலியர் பணி கிடைக்க அவர்கள் கடுமையான விதிகளைக் கடந்து செல்லவேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |