தமிழகத்தில் ஒரே நாளில் 30,000-ஐ கடந்த கொரோனா.. சென்னையில் சற்று குறைந்த பாதிப்பு!
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 30,744 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 6,452 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று 7,038 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையை தொடர்ந்து இன்று கோவையில் 3,886 பேரும், செங்கல்பட்டில் 2,377 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 31,03,410-ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம், கடந்த 24 மணிரேநத்தில் கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,178 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி 1,94,697 பேர் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
30,744 patients test positive for #COVID19 in Tamil Nadu today (January 22). Here is the update. #Corona pic.twitter.com/OUhqVOxLbT
— D Suresh Kumar (@dsureshkumar) January 22, 2022
கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 23,372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் மொத்தம் 28,71,535 பேர் குணம் அடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021