பிரித்தானியாவில் தனிமையில் வாடும் முதியவர்களை தாக்கும் நோய்! ஆய்வில் வெளியான தகவல்
பிரித்தானியாவில் தனிமையில் வாடும் முதியவர்களை குறிவைத்து புதிய வகை நோய் ஒன்று வேகமாக பரவி வருவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கொடூரமாக தாக்கி வருகின்றது, கொரோனா வீரியமே குறையாத நிலையில் கொரோனாவில் இருந்து வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் உலக நாடுகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில் புதிதாக தென் ஆப்பிரிக்காவில் Omicron வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 110க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பிடியில் இருந்து விடுபட அனைத்து நாடுகளும் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் லண்டனில் புதிய வகை loneliness epidemic என்கின்ற நோய் பரவி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இந்த நோயால் 65 வயதை கடந்தவர்கள் தான் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.
முதியவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள இந்த புதிய வைரஸால் தற்போது 36 லட்சம் நபர்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பெருந்தொற்றால் தனிமையில் உள்ள முதியவர்களுக்கு இந்த சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல 80 வயதை கடந்தவர்களில் சுமார் 23 சதவீதம் பேர் தனித்து வாழ வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படுவதால் அவர்களும் loneliness epidemic நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.