8 மாதங்களிலேயே இடிந்து விழுந்த 35 அடி உயர சிலை.., சிற்பியை கைது செய்த பொலிஸார்
மோடி திறந்து வைத்த 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை 8 மாதங்களிலேயே இடிந்து சுக்கு நூறான நிலையில் சிற்பியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இடிந்து விழுந்த சிலை
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் சிலையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டில் திறந்து வைத்தார்.
இந்த சிலையின் உயரம் 35 அடியாகும். அங்கு, கனமழை பெய்தும், சூறாவளி காற்றும் வீசிய நிலையில், மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி முழுமையாக உடைந்து கீழே விழுந்தது. இதில், தலை, கை, கால் என அனைத்து பாகங்களும் விழுந்து சிதறின.
இதையடுத்து, பாஜகவின் ஆட்சியின் ஊழல் மிகப்பெரிய உச்சத்தில் உள்ளது. மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி 8 மாதங்களிலேயே இடிந்து விழுந்தது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.
மேலும், சிலை இடிந்து விழுந்தது தொடர்பாக தலை குனிந்து சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Lover's leap Waterfall: இயற்கை எழில் கொஞ்சும் இலங்கையின் நீர்வீழ்ச்சி.., பெயருக்கு பின்னால் இருக்கும் காரணம்
சிற்பி கைது
இதனிடையே, சிந்துதுர்க்கில் உள்ள மால்வன் காவல் நிலையத்தில் சிற்பி, கட்டிட பொறியாளர் சேதன் பட்டீல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, சிற்பி தலைமறைவானார்.
இதையடுத்து, கடந்த மாதம் 31 -ம் திகதி அன்று சிலையை வடிவமைத்த கட்டிட பொறியாளர் சேதன் பட்டீல் என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.
இதன்பின்னர், தலைமறைவான சிற்பி ஜெய்தீப் ஆப்தே என்பவரை தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகரில் வைத்து கைது செய்தனர்.
பின்னர் அவர் சிந்தூர்க் அழைத்து செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |