பிரான்சில் 35 ஆண்டுகளுக்கு முன் காணமல் போன பெண்! தேடும் பணி மீண்டும் ஆரம்பம்! என்ன காரண்ம தெரியுமா?
பிரான்சில் 35 ஆண்டுகளுக்கு முன் காணமல் போன பெண்ணை தேடும் பணியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.
பிரான்சின் Isère நகரில் வசித்த பெண் ஒருவர் கடந்த 1986-ஆம் ஆண்டின் மே மாதத்தில், திடீரென்று மர்மமான முறையில் காணமல் போனார். இதனால் இது குறித்து பொலிசில் புகார் கொடுக்கப்பட்டது.
ஆனால் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் தெரியவில்லை. பொலிசார் எவ்வளவு முயற்சிகள் மேற்கொண்டும், ஒரு சிறிய ஆதாரம் கூட கிடைக்கவில்லை.
இந்நிலையில், தற்போது, 35 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கு மீண்டும் விசாரணைகளுக்கு வந்துள்ளது. Marie-Thérèse Bonfanti-ன் குடும்பத்தினர் மீண்டும் இந்த வழக்கை ஆரம்பித்துள்ளனர்.
மரபணு சான்றுகளை அடிப்படையாக கொண்டு Marie-Thérèse Bonfanti-னை தேடும் முயற்சியில் பொலிசார் இறங்கியுள்ளனர்.
மேலும், அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை துவங்கியுள்ளனர்.