2026-இல் பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெற்ற 35,000 இந்தியர்கள்

Citizenship Indian Origin
By Ragavan Aug 28, 2026 11:31 PM GMT
Report

35000 Indians gain UK settlement in 2026: 2026 ஜூன் வரை 35,000 இந்தியர்கள் பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெற்றனர்.

35,384 இந்தியர்கள்

2026-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவடையும் காலக்கட்டத்தில், 35,384 இந்தியர்கள் பிரித்தானியாவில் Indefinite Leave to Remain (ILR) எனப்படும் நிரந்தர குடியுரிமை அனுமதியை பெற்றுள்ளனர்.

இது கடந்த ஆண்டை விட 51 சதவீதம் அதிகம் என UK Home Office வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

35000-Indians-gain-UK-settlement-in-2026

ILR

ILR என்பது பிரித்தானியாவில் காலவரையற்ற குடியிருப்பு மற்றும் வேலை செய்யும் உரிமையை வழங்கும் முக்கியமான நிலையாகும்.

இந்தியர்கள், பிரித்தானியாவில் நிரந்தர குடியுரிமை பெறும் மிகப்பெரிய குழுவாகத் திகழ்கின்றனர். குறிப்பாக வேலை வாய்ப்பு வழியாக பிரித்தானியாவிற்கு சென்றவர்கள், தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வாழ்ந்த பின் ILR பெறும் தகுதியை பெற்றுள்ளனர்.

குடியுரிமை விதிகளை கடுமையாக்க திட்டம்

ஆனால், பிரித்தானிய அரசு விரைவில் குடியுரிமை விதிகளை கடுமையாக்க திட்டமிட்டுள்ளது. தற்போதைய 5 ஆண்டுகள் தகுதி காலம், 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட உள்ளது.

சில பிரிவுகளில், குறைந்த சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு 15 ஆண்டுகள், அரசு நிதி உதவிகளைப் பெறுவோருக்கு 20 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உருவாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேபாள வெள்ளப் பேரழிவில் 35 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் காணாமல் போனது

நேபாள வெள்ளப் பேரழிவில் 35 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் காணாமல் போனது

2025-26 காலகட்டத்தில், 24,851 இந்தியர்கள் பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து 18,489 பாகிஸ்தான் குடிமக்கள் குடியுரிமை பெற்றுள்ளனர்.

இதன் மூலம், இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் பிரித்தானியாவில் குடியுரிமை பெறும் மிகப்பெரிய குழுவாகத் திகழ்கின்றனர்.

வெளிநாட்டு மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் மீது டிரம்ப் நிர்வாகம் கடும் கட்டுப்பாடு

வெளிநாட்டு மாணவர்களுக்கான இன்டர்ன்ஷிப் மீது டிரம்ப் நிர்வாகம் கடும் கட்டுப்பாடு

மாணவர்கள்

இதே நேரத்தில், இந்திய மாணவர்கள் பிரித்தானியாவில் குறைந்துள்ளனர். 2026 ஜூன் மாதம் முடிவடையும் காலத்தில், 82,523 இந்திய மாணவர்கள் UK மாணவர் விசா பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 16 சதவீதம் குறைவு. சீனா, 86,368 மாணவர் விசா பெற்றதால், இந்தியாவை முந்தியுள்ளது.

மேலும், மாணவர்களின் dependent family members விசா வழங்கல் 81 சதவீதம் குறைந்துள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள், இந்தியர்களின் பிரித்தானிய குடியேற்றத்தில் இரு விதமான மாற்றங்களை காட்டுகின்றன. வேலை வாய்ப்பு வழியாக சென்றவர்கள் அதிக அளவில் நிரந்தர குடியுரிமை பெறுகின்றனர். ஆனால், புதிய மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு விதிகள் கடுமையாக்கப்பட்டதால், அவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

பிரித்தானியாவில் புதிய விதி: சாக்கெட்டில் நேரடியாக சோலார் பேனல்களை இணைக்கும் வசதி

பிரித்தானியாவில் புதிய விதி: சாக்கெட்டில் நேரடியாக சோலார் பேனல்களை இணைக்கும் வசதி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US