கொலையில் முடிந்த சிறுவர்கள் சண்டை
இந்தியாவின் புது டெல்லியில் சிறுவன் ஒருவனிடமிருந்து சிலர் மொபைல் போன் ஒன்றை பறித்துச் செல்ல, அதனால் துவங்கிய சண்டை, ஒரு உயிர் பலியில் முடிந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
கொலையில் முடிந்த சிறுவர்கள் சண்டை
புது டெல்லியிலுள்ள ஆசாத்பூர் என்னுமிடத்தில் வாழ்ந்துவரும் அன்ஷு (39), ராக்கி (39) தம்பதியரின் மகனான 10 வயது சிறுவன் தன் வீட்டின் முன் அமர்ந்து தனது மொபைலில் ஏதோ விளையாடிக்கொண்டிருந்திறான்.
அப்போது, மூன்று பையன்கள் அவனிடமிருந்து மொபைலை பிடுங்கிக்கொண்டு ஓடியுள்ளார்கள்.
அதைக் கண்ட அந்த சிறுவனின் பெற்றோர் தட்டிக் கேட்டிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட அந்த மூன்று பையன்களில் ஒருவனை அன்ஷு அறைந்திருக்கிறார்.

கோபமடைந்த அந்த பையன்கள் பழிக்குப் பழி வாங்குவதாகக் கூறிச் சென்றிருக்கிறார்கள்.
சொன்னதுபோலவே கத்திகளுடன் திரும்பிவந்த அந்த பையன்கள் அன்ஷூவையும் ராக்கியையும் தாக்க, காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், ராக்கி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ராக்கியின் கணவரான அன்ஷூ சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியுள்ளார்.
ராக்கியைக் கத்தியால் குத்திக் கொன்ற அந்த பையன்களை பொலிசார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |