அதிகரித்து வரும் டெங்கு நோயாளிகள் - 2 பேர் பலி
இந்த ஆண்டின் முதல் மூன்று வாரங்களுக்குள் நாட்டில் 3,649 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) தெரிவித்துள்ளது.
மேலும், இந்த காலகட்டத்தில் டெங்கு தொடர்பான இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 491 நோயாளிகள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், 558 பேர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், 95 பேர் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இலங்கை முழுவதும் உள்ள 22 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |