Job: 3600 காலிபணியிடங்கள்.., தமிழ்நாடு காவல்துறையில் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், தமிழ்நாட்டில் காவலர்கள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த வருடத்திற்கான காலி பணியிடங்களை சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது.
காலிபணியிடங்கள்
- இரண்டாம் நிலை காவலர்கள்- 2,833 பணியிடங்கள்
- சிறைக் காவலர்கள்- 180 பணியிடங்கள்
- தீயணைப்பு வீரர்கள்- 631 பணியிடங்கள்
எப்படி விண்ணப்பிப்பது?
இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான தேர்வுக்கு இணைய வழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் நாள்
ஆகஸ்ட் 22ஆம் திகதி அதாவது நாளை முதல் செப்டம்பர் 21ஆம் திகதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்படும்.
செப்டம்பர் 25ஆம் திகதி விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து தேர்வு எப்போது?
எழுத்து தேர்வு நவம்பர் 09ஆம் திகதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களை www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |