இந்தியாவுடனான உறவை கனடா பிரதமர் சரியாக கையாளவில்லை: கனேடிய மக்கள் கருத்து
இந்தியாவுடனான உறவை கனடா பிரதமர் சரியாக கையாளவில்லை என சுமார் 40 சதவிகித கனேடிய மக்கள் கருதுவதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
கனேடிய மக்கள் கருத்து
Angus Reid Institute (ARI) என்னும் அமைப்பும், Asia-Pacific Foundation of Canada (APF) என்னும் அமைப்பும் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்று, இந்தியா கனடா இருதரப்பு உறவுகளை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சரிவர கையாளவில்லை என 39 சதவிகித கனேடியர்கள் கருதுவதாக தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், 32 சதவிகித கனேடியர்கள், இந்தக் கருத்துக்கு எதிரான கருத்தைத் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், ட்ரூடோ கனடாவின் பிரதமராக இருக்கும்வரையில், இந்தியாவுக்கும் கனடாவுக்குமிடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்படாது என 39 சதவிகித கனேடியர்கள் கருதுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
2023ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 18ஆம் திகதி, காலிஸ்தான் பிரிவினைவாதியான ஹர்தீப்சிங் நிஜ்ஜர் என்பவர் கொல்லப்பட்ட விடயத்தில் இந்திய அரசின் ஏஜண்டுகளின் பங்களிப்பு உள்ளதாக கடந்த செப்டம்பரில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |