லண்டனில் தீப்பிடித்து எரிந்த மூன்றாவது பேருந்து! சமூக வலைதளங்களில் வெளியான பரபரப்பு வீடியோ
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மீண்டும் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 12ஆம் திகதி கிழக்கு லண்டனில் உள்ள North Woolwich பகுதியில் ஹைபிரிட் வாகனம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
இதுதொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து Wimbledon-யில் Optare Metrodecker பேருந்தின் பின்புறம் ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.
Another London bus on fire this time inside bus garage …..
— Ediz (@ediz1975) January 24, 2024
What the hell is going on with our buses ????????
Waiting for more info pic.twitter.com/tdIn5XmJuQ
இந்த நிலையில் நேற்றைய தினம் Putney உள்ள Chelverton சாலையில் மீண்டும் ஒரு பேருந்து Garage உள்ளே பேருந்து தீப்பிடித்து எரிந்தது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதங்களில் வெளியானதைத் தொடர்ந்து, Garage-க்குள் இருந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், தீ உடனடியாக அணைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. மேலும் Go Ahead London தனது ஊழியர்களுக்கு செய்தி அனுப்பப்பட்டுள்ளது.
அதில், 'இந்த விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. சுமார் 380 Electric பேருந்துகளில் முன்னெச்சரிக்கை கடற்படை சோதனை நடந்து வருகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |