மரண பீதியை காட்டிய ஆப்கானிஸ்தான்: 2வது சூப்பர் ஓவரில் போராடி வென்ற இந்திய அணி
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 2வது சூப்பர் ஓவரில் நூலிழையில் வெற்றி பெற்றுள்ளது.
சதம் விளாசிய ரோகித்
இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான 3வது டி20 போட்டி பெங்களூரு கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரர்களான ஜெய்ஸ்வால் 4 ஓட்டங்களிலும், விராட் கோலி மற்றும் சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகியும் அதிர்ச்சி தந்தனர்.
பின்னர் வந்த சிவம் தூபே 1 ரன்னில் வெளியேறியதால் இந்திய அணி 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் என தடுமாறியது.
ஆனால் இதையடுத்து ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் ஜோடி ஆப்கான் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர்.
? That Record-Breaking Moment! ? ?@ImRo45 notches up his 5⃣th T20I hundred ? ?
— BCCI (@BCCI) January 17, 2024
Follow the Match ▶️ https://t.co/oJkETwOHlL#TeamIndia | #INDvAFG | @IDFCFIRSTBank pic.twitter.com/ITnWyHisYD
கேப்டன் ரோகித் சர்மா சிக்ஸர் மழை பொழிந்து 69 பந்துகளில் 8 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 121 ஓட்டங்கள் விளாசினார். ரிங்கு சிங் 39 பந்துகளில் 6 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்கள் குவித்தார்.
இதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 212 ஓட்டங்கள் குவித்தது.
டிரா செய்த ஆப்கானிஸ்தான்
சற்று கடினமான இலக்குடன் களமிறங்கினாலும் ஆப்கான் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர், தொடக்க வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இணைந்து 93 ஓட்டங்கள் குவித்தனர்.
குர்பாஸ் 32 பந்துகளிலும், ஸத்ரான் 41 பந்துகளிலும் அரை சதம் கடந்து வலுவான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.
பின்னர் வந்த குல்பதின் நைப் கடைசி வரை விக்கெட்டை இழக்காமல் 23 பந்துகளில் 55 ஓட்டங்கள் குவித்தார், முகமது நபி தன் பங்கிற்கு 16 பந்துகளுக்கு 34 ஓட்டங்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.
Excellent effort near the ropes!
— BCCI (@BCCI) January 17, 2024
How's that for a save from Virat Kohli ??
Follow the Match ▶️ https://t.co/oJkETwOHlL#TeamIndia | #INDvAFG | @imVkohli | @IDFCFIRSTBank pic.twitter.com/0AdFb1pnL4
கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 19 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், இந்திய அணியின் முகேஷ் குமார் அந்த ஓவரை வீசினார்.
முதல் 5 பந்துகளில் Wide, 4, 0, Wide, 2, 6, 2 என 16 ஓட்டங்கள் குவிக்கப்பட்டது, கடைசி பந்தில் 3 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஆப்கானிஸ்தான் அணியால் 2 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
இதனால் 3வது டி20 போட்டி சமனில் நின்றது, வெற்றியாளரை தீர்மானிப்பதற்காக சூப்பர் ஓவர் வீசப்பட்டது.
சூப்பர் ஓவர்
இந்த சூப்பர் ஓவரில் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 1 பவுண்டரி 1 சிக்சருடன் 16 ஓட்டங்கள் சேர்த்தது.
17 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய நிலையில், முதல் 5 பந்தில் இந்தியா 15 ஓட்டங்கள் எடுத்தது, ஆனால் கடைசி பந்தில் இந்திய அணியால் 1 ரன் மட்டுமே எடுக்க முடிந்ததால் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது.
இரண்டாவது சூப்பர் ஓவர்
இதையடுத்து 2வது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது, முதல் பேட்டிங்கில் இந்திய அணி களமிறங்கிய நிலையில், 5 பந்துகள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 11 ஓட்டங்கள் குவித்தது.
WHAT. A. MATCH! ?
— BCCI (@BCCI) January 17, 2024
An edge of the seat high scoring thriller in Bengaluru ends with #TeamIndia's match and series win ?
Scorecard ▶️ https://t.co/oJkETwOHlL#TeamIndia | #INDvAFG | @IDFCFIRSTBank pic.twitter.com/731Wo4Ny8B
12 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி 2வது சூப்பர் ஓவரில் களமிறங்கிய நிலையில் ரவி பிஷ்னோய் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில் நபியும், 3வது பந்தில் குர்பாஸும் ஆட்டமிழந்தனர்.
இதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணி நூலிழையில் 3வது டி20 போட்டியில் ஆப்கானிதான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை முழுவதும் இந்தியா வென்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Indian Cricket team, Afghanistan cricket team, Rohit Sharma, Virat Kohli, Rinku Singh, Sanju Samson, 3rd t20, INDvsAFG, Ibrahim Zadran, Rahmanullah Gurbaz, Gulbadin Naib, Mohammad Nabi, Super Over, Match draw, 2nd Super Over, Super Catch, Viral Video, Kohli catch video