ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் மாகாணமொன்றின் மக்களை எழுப்பிய நிலநடுக்கம்
A magnitude four earthquake has shaken the canton of Glarus: சுவிட்சர்லாந்தின் க்லாரஸ் மாகாணத்தில், நேற்று அதிகாலை 4.37 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவான நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.
சுவிஸ் மாகாணமொன்றின் மக்கள், ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே நிலநடுக்கம் ஒன்றை எதிர்கொண்டார்கள்.
சுவிஸ் மாகாணமொன்றில் நிலநடுக்கம்
சுவிட்சர்லாந்தின் க்லாரஸ் மாகாணத்தில், நேற்று அதிகாலை 4.37 மணியளவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.

அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவான நிலையில், சுவிட்சர்லாந்து முழுவதுமே அந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
அத்துடன், பத்து நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் லேசானதொரு நிலநடுக்கமும் உணரப்பட்டுள்ளது.
Linthal என்னுமிடத்திலிருந்து 6 கிலோமீற்றர் மேற்கில், 2.4 கிலோமீற்றர் ஆழத்தில் அந்த நிலநடுக்கம் துவங்கியுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்துக்கு அருகிலாகிலும் பாதிப்புகளுக்கு வாய்ப்புள்ளது என்றாலும், பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, ஆண்டொன்றிற்கு 1,000 முதல் 1,500 நிலநடுக்கங்கள் வரை பதிவாகின்றன.
என்றாலும், அவற்றில் 20 மட்டுமே மக்களால் உணரப்படும் அளவுக்கு வலிமையானதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.