நெடுஞ்சாலையில் 4 விமானங்களை தரையிறக்கி அசத்திய இந்திய ராணுவம்
4 army aircraft land and takeoff in Amritsar-Jamnagar corridor: முதல்முறையாக அமிர்தசரஸ்-ஜாம்நகர் நெடுஞ்சாலையின் (NH-754A) ஒரு பகுதியில், இந்திய ராணுவத்தின் 4 மைக்ரோலைட் விமானங்கள் வெற்றிகரமாகத் தரையிறங்கி எரிபொருள் நிரப்பட்டு புறப்பட்டுள்ளது.
சாலையில் தரையிறங்கிய விமானங்கள்
' வீரம் மற்றும் ஒற்றுமையின் இறக்கைகள் பயணம்' என்பதன் ஒரு பகுதியாக, அமிர்தசரஸ்-ஜாம்நகர் NH-754A சாலையில் இந்திய ராணுவத்தின் 4 மைக்ரோலைட் விமானங்கள் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த அணிவகுப்பில் 2 நிலையான இறக்கை கொண்ட மைக்ரோலைட் விமானங்களும், 2 இயந்திர சக்தி கொண்ட ஹேங் கிளைடர்களும் இடம்பெற்றிருந்தன.
இந்த விமானங்கள் காண்ட்லா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, குஜராத்தின் பதான் மாவட்டத்தில் உள்ள சந்தல்பூர் தாலுக்காவில் உள்ள பகுத்ரா சுங்கச்சாவடிக்கு அருகில் தரையிறங்கின.

ஒரு தேசிய நெடுஞ்சாலையில் 4 விமானங்கள் கொண்ட அணிவகுப்பு ஈடுபட்டு, வெற்றிகரமாகத் தரையிறக்கி எரிபொருள் நிரப்பிய முதல் நடவடிக்கை இதுவாகும்.
அவசர காலங்களிலும் பிற செயல்பாட்டுத் தேவைகளின்போதும் சிறிய விமானங்களுக்கான மாற்றுத் தரையிறங்கு தளங்களாக, தேசிய நெடுஞ்சாலைகளின் பொருத்தமான பகுதிகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறை இந்த செயல்விளக்கம் எடுத்துக்காட்டியது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), இராணுவம், உள்ளூர் நிர்வாகம் மற்றும் காவல்துறையுடன் இணைந்து, இந்த நடவடிக்கைக்காக அந்த பகுதியைத் தயார் செய்தது.
இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய ராணுவத்திற்கும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் (NHAI) இடையேயான ஒருங்கிணைப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க செயல் விளக்கமாக, 'Wings of Valour and Unity Expedition' பயணத்தில் பங்கேற்ற இந்திய ராணுவத்தின் 'Team Mountain Eagles' குழுவைச் சேர்ந்த மைக்ரோலைட் விமானங்கள், குஜராத்தில் உள்ள செயினேஜ் கி.மீ 946 மற்றும் கி.மீ 949-க்கு இடையில் அமைந்துள்ள அமிர்தசரஸ்–ஜாம்நகர் பொருளாதார வழித்தடத்தில் (NH-754A) வெற்றிகரமாகத் தரையிறங்கிப் புறப்பட்டன.

இந்த குறிப்பிடத்தக்க சாதனை, இணைப்பை வலுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, நமது ஆயுதப் படைகளின் மூலோபாய மற்றும் செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உலகத் தரம் வாய்ந்த நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை உருவாக்குவதில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும் NHAI-யின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
மேலும், பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஒருங்கிணைப்புடன், சாத்தியமான இடங்களில் வான்வழி சாகசங்கள், சுற்றுலா மற்றும் பிற வளர்ந்து வரும் செயல்பாடுகளை எளிதாக்குவதில் தேசிய நெடுஞ்சாலைகளின் ஆற்றலையும் இது எடுத்துக்காட்டுகிறது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியை முன்மாதிரியாக ஒருங்கிணைத்து வெற்றிகரமாகச் செயல்படுத்திய இந்திய ராணுவத்தின் 'டீம் மவுண்டன் ஈகிள்ஸ்', NHAI மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் நான் வாழ்த்துகிறேன்.
In a historic demonstration of synergy between the Indian Army and the National Highways Authority of India (NHAI), 4️⃣ microlight aircraft of the Indian Army’s ‘Team Mountain Eagles’, participating in the Wings of Valour and Unity Expedition, successfully landed and took off from the Amritsar–Jamnagar Economic Corridor (NH-754A), between Chainage Km 946 and Km 949 in Gujarat. This remarkable feat underscores the commitment of the Ministry of Road Transport & Highways and NHAI to developing world-class highway infrastructure that strengthens connectivity, drives economic growth and meets the strategic and operational needs of our Armed Forces. It also highlights the potential of National Highways to facilitate aero-adventure, tourism and other emerging activities, wherever feasible, with appropriate safety measures and coordination. I congratulate the Indian Army’s ‘Team Mountain Eagles’, NHAI and all the concerned authorities for their exemplary coordination and successful execution of this historic endeavour. Under the visionary leadership of Hon’ble Prime Minister Shri @narendramodi Ji, we remain committed to building a robust, resilient and future-ready National Highway network that goes beyond connectivity to serve the nation’s developmental, strategic and emergency-response needs. #PragatiKaHighway #AmritsarJamnagarEconomicCorridor #TeamMountainEagles
— Nitin Gadkari (@nitin_gadkari) November 26, 2026
நாட்டின் வளர்ச்சி, உத்திசார் மற்றும் அவசரகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு வலுவான, மீள்திறன் கொண்ட மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.