தபால் நிலையமே வெளியிட்ட 4 சிறந்த சேமிப்பு திட்டங்கள்.., அதை பற்றிய முழு விவரங்கள்
4 மிகச்சிறந்த சிறுசேமிப்பு திட்டங்கள் குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அஞ்சல் அலுவலகம் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது.
முதலீட்டுக்காக பல வகையான திட்டங்கள் தபால் அலுவலகத்தால் நடத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தைப் பெறலாம். அதே நேரத்தில், இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யப்படும் பணம் முற்றிலும் பாதுகாப்பானது.
மேலும், பெறப்பட்ட வருமானமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிகச்சிறந்த சிறுசேமிப்பு திட்டங்களான தொடர் வைப்புத்தொகை (Recurring Deposit), மாதாந்திர வருமானத் திட்டம் (Monthly Income Scheme), பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund) மற்றும் சுகன்யா சம்ரிதி யோஜனா ஆகிய 4 திட்டங்கள் குறித்து அஞ்சல் அலுவலகம் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது.
4 investment schemes by India Post that are too good to miss!👀👆🏼
— India Post (@IndiaPostOffice) July 11, 2025
Click here for more details: https://t.co/4GkARC3iny#Investment #DakSeDhan #IndiaPost #Savings pic.twitter.com/8d9UU9h3x4
மேலும், இந்த திட்டங்களை சிறந்த முதலீட்டு விருப்பங்கள் என்று விவரித்துள்ளது. அதை பற்றிய தகவலை பார்க்கலாம்.
1.Recurring Deposit
போஸ்ட் ஆபிஸ் RD திட்டம் மிகவும் சிறப்பான திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில், ஒவ்வொரு மாதமும் சிறிய அளவில் முதலீடு செய்வதன் மூலம் பெரிய நிதியை நீங்கள் சேகரிக்கலாம்.
ரூ.100ல் மட்டுமே உங்கள் முதலீட்டைத் தொடங்க முடியும். Post Office RD திட்டம் 6.7 சதவீத வட்டி விகிதத்தில் வருமானத்தை தருகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும்.
2. Monthly Income Scheme
ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற விரும்புவோருக்கு அஞ்சல் அலுவலகத்தின் Monthly Income Scheme சிறந்த வழியாகும். இந்த திட்டத்தின் வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.4% ஆகும். இதன் முதிர்வு காலம் 5 ஆண்டுகள்.
அதேபோல, இதில் முதலீட்டாளர்கள் தனிநபர் கணக்கில் ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம்.
3. Public Provident Fund
PPF திட்டமானது ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. பரஸ்பர நிதிகள் அல்லது பங்குகள் போன்ற சந்தை இணைக்கப்பட்ட முதலீடுகள் ஆகியவை PPF திட்டத்தை விட அதிக வருமானத்தை கொடுத்தாலும் அவைகள் ஆபத்தானவை.
இந்த திட்டத்தில் நீங்கள் சிறிய முதலீடு செய்து அதிக லாபத்தை பெறலாம். மேலும், PPF-ல் முதலீட்டாளர்கள் Exempt-Exempt-Exempt (EEE) நன்மைகளை பெற முடியும். உங்களின் மொத்த முதலீடு, சம்பாதித்த வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கு வரிகள் இல்லை.
இது வரியில்லா சேமிப்பு விருப்பமாகும். PPF பங்களிப்புகளில் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் சந்தாதாரர்கள் விலக்குகளைப் பெறலாம்.
ஒவ்வொரு இந்திய குடிமகனும் PPF கணக்கை திறந்து ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் முதலீடு செய்யலாம். குறைந்தபட்சமாக ரூ.500 டெபாசிட் செய்ய முடியும். PPF முதலீடுகளுக்கு 15 ஆண்டுகள் லாக்-இன் (lock-in period) காலம் உள்ளது.
4. Sukanya Samriddhi Yojana
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் மகளின் குழந்தைப் பருவத்திலிருந்தே முதலீடு செய்யத் தொடங்குகிறார்கள். 10 வயது அல்லது அதற்கும் குறைவான மகளுக்கு சுகன்யா சம்ரிதி யோஜனாவில் முதலீடு செய்யலாம்.
இந்தத் திட்டத்தில் நீங்கள் 15 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகள். இந்தத் திட்டம் 8.2 சதவீத வருமானத்தை அளிக்கிறது.
இந்தத் திட்டத்தில் ஆண்டுதோறும் ரூ.250 முதல் முதலீடு செய்யத் தொடங்கலாம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |