ரொனால்டோவை பாராட்டி தள்ளும் உலக மக்கள்... பல ஆயிரம் கோடியை இழந்த பிரபல குளிர்பான நிறுவனம்! WHO ஆதரவு
போர்ச்சுக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியன் ரொனால்டோவின் செயலால் உலக மக்கள் பலரும் பாராட்டி வருவதுடன், உலக சுகாதார அமைப்பு அவரது செயலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதிலும் அதிகர் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட விளையாட்டு என்றால், கால்பந்து விளையாட்டை சொல்லலாம். அந்தளவிற்கு உலகின் நம்பர் ஒன் விளையாட்டாக உள்ளது.
இதில் குறிப்பாக சில வீரர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதில் ஒருவர் தான் கிறிஸ்டியன் ரொனால்டோ. போர்த்துகல் அணிக்காக விளையாடி வரும் இவர், தற்போது யூரோ கால்பந்தாட்ட தொடரில் விளையாடி வருகிறார்.
அதன் படி, நேற்று ஹங்கேரி அணியும், போர்த்துகல் அணியும் மோதின. இதற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் போர்த்துகல் அணியின் கேப்டன் ரொனால்டோ பங்கேற்றார்.
அப்போது அவரது மேஜைக்கு முன்னர் தண்ணீர் பாட்டில்களுடன் இரண்டு கோகோ கோலா பாட்டில்களும் வைக்கப்பட்டிருந்தன. உடனே இதைக் கண்ட ரொனால்டோ அந்த கோகோ கோலா பாட்டில்களை எடுத்துவிட்டு, அருகில் இருந்த தண்ணீர் பாட்டில் தான் உடலுக்கு நல்லது என்பது போல் காட்டினார்.
Stay fit & healthy like @Cristiano ? by reducing sugar consumption and limiting intake of sweets & sugary drinks.
— World Health Organization (WHO) (@WHO) June 16, 2021
There is more you can do ?https://t.co/60b3xRjMEB #BeatNCDs pic.twitter.com/qMXLh5HFOk
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது. இதற்கு உலக மக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது. சற்று முன் கூட, உலக சுகாதார அமைப்பு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், குளிர்பானங்களை தவிருங்கள் என்று ரெனால்டோவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
மேலும், ரொனால்டோவின் இந்த செயலால், கோகோ கோலா நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு ஒரே நாளில் 400 கோடி டொலர் சரிந்தது. அதாவது, சந்தை மதிப்பு ஒரே நாளில் சுமார் 29,316.40 கோடி ரூபாய் வரை சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.