விநாயகர் சிலையை குளத்தில் கரைத்த போது 4 சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்
இந்திய மாநிலம், மத்திய பிரதேசத்தில் விநாயகர் சிலையை குளத்திற்கு சென்று கரைத்த போது, 4 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விநாயகர் சிலை குளத்தில் கரைப்பு
இந்தியா முழுவதும் கடந்த 18 ஆம் திகதி விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, விநாயகர் சிலையை கரைக்கும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மத்தியபிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் உள்ள நிராவல் பிடானியா கிராமத்தில் உள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு விநாயகர் சதுர்த்தி விழா 10 நாள்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பின்பு, விநாயகர் சிலையை குளத்திற்கு சென்று கரைப்பதற்காக கிராமத்தினர் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
4 சிறுவர்கள் உயிரிழப்பு
அப்போது, விநாயகர் சிலையை குளத்தில் கரைத்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக சிறுவர், சிறுமியர் 7 பேர் குளத்தில் மூழ்கினர்.
அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராமத்தினர், 3 சிறுவர்களை காப்பாற்றினார். எனினும், 3 சிறுமிகள் உள்பட 4 பேர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து, வழக்குப்பதிவு செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குளத்தில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |