காணாமல் போன நான்கு பதின்ம வயது நண்பர்கள் சடலமாக மீட்பு: வெளியான பதறவைக்கும் பின்னணி
பிரித்தானியாவின் ஸ்னோடோனியா பகுதியில் முகாம் அமைத்து தங்கச் சென்ற பதின்ம வயதினர் நால்வர் மாயமாகியிருந்த நிலையில், தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நான்கு நண்பர்களின் மறைவு
ஓரளவு நீரில் மூழ்கிய காரில் இருந்து அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் நான்கு நண்பர்களின் மறைவு குடும்பத்தினர் சுற்றத்தார் என அனைவரையும் உலுக்கியுள்ளது.
கடைசியாக நால்வரையும் ஞாயிற்றுக்கிழமை காலை வெள்ளி நிற ஃபோர்டு ஃபீஸ்டாவில் ஏறிக் கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். இந்த நிலையில் நார்த் வேல்ஸ் பொலிசார் தெரிவிக்கையில், ஓரளவு தண்ணீரில் மூழ்கிய காரை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியிட்டனர்.
இதனையடுத்து நால்வரின் சடலமும் அந்த வாகனத்தில் காணப்பட்டதாக பொலிசார் உறுதி செய்துள்ளனர். நால்வரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அவர்கள் வந்து அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
@wns
Eryri தேசிய பூங்காவிற்கு
மேலும், நண்பர்கல் நால்வரும் ஹார்லெக் மற்றும் போர்த்மாடோக் ஆகிய வெல்ஷ் கடற்கரைப் பகுதிகளிலிருந்து பயணம் செய்துள்ளனர் என்றும், இவர்கள் ஸ்னோடோனியா பகுதியில் அமைந்துள்ள Eryri தேசிய பூங்காவிற்கு செல்வதாக திட்டமிட்டிருந்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
@Mirrorpix
நால்வரும் திங்கட்கிழமை பகல் வீடு வந்து சேர வேண்டியவர்கள், எந்த தகவலும் இன்றி மாயமாகியுள்ளதை அடுத்து, உறவினர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையிலேயே பொலிசார், மூழ்கிய காரில் இருந்து நால்வரையும் சடலமாக மீட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |