நான்குமுறை புற்றுநோயை வென்ற பெண்: இளைஞரின் அலட்சியத்தால் நேர்ந்த துயரம்
நான்குமுறை புற்றுநோயை வென்ற பெண்ணொருவர், ஒரு இளைஞரின் அலட்சியத்தால் அநியாயமாக உயிரிழக்க நேர்ந்துள்ளது.
நான்குமுறை புற்றுநோயை வென்ற தாய்
அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்திலுள்ள் Berthoud என்னுமிடத்தில் வாழ்ந்துவந்தவர் ஜெனிபர் ஜேம்ஸ் (49).
கணவரைப் பிரிந்துவாழும், நான்கு பிள்ளைகளின் தாயாகிய ஜெனிபர், கடந்த மாதம், அதாவது, ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி பரிதாபமாக பலியானார்.
நான்கு முறை மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, புற்றுநோயை வென்றவர் ஜெனிபர்.
தன் வீட்டிலிருந்த அவர் மீது எங்கிருந்தோ வந்த ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் உயிரிழந்துள்ளார் ஜெனிபர்.
தகவலறிந்து வந்த பொலிசார் CCTV கமெரா காட்சிகளின் அடிப்படையில் நடத்திய ஆய்வில், எபினேசர் (Ebenezer Worku, 20) என்னும் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஜெனிபர் வீட்டுக்கு அருகில் கார் ஒன்றில் அமர்ந்திருந்த எபினேசர், துப்பாக்கி ஒன்றை சுத்தம் செய்துகொண்டிருந்திருக்கிறார்.
அப்போது தவறுதலாக அவரது கைபட்டு அந்த துப்பாக்கி வெடித்துள்ளது. .
உடனே, காரின் விளக்குகளை அணைத்துவிட்டு அமைதியாக அங்கிருந்து நகர்ந்துள்ளார் எபினேசர்.
ஆனால், தன் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு ஒரு உயிரைப் பறித்தது தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் அவர்.
கைது செய்யப்பட்டுள்ள எபினேசர் மீது கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நான்கு முறை புற்றுநோயை வென்றும், எபினேசரின் அலட்சியத்தால் ஜெனிபர் அநியாயமாக உயிரிழந்துவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |