ஜேர்மனியில் 4 நாட்கள் தான் வேலை: நிகழ்ந்த அதிசயம்: சாத்தியமானது எப்படி?

Brazil South Africa Ireland Europe
By Sivaraj May 31, 2025 09:10 AM GMT
Report

ஜேர்மனியில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற நடைமுறையால் லாபம் கொட்டுவதாக தெரிய வந்துள்ளது.  

புதிய நடைமுறை

கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ஜேர்மனியில் உள்ள 45 நிறுவனங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும்தான் வேலை என்ற நடைமுறையை கொண்டுவந்தன. "4 Day Week Global" என்ற வழிகாட்டுதலின்படி இந்த நிறுவனங்கள் புதிய நடைமுறையை அமுலுக்கு கொண்டுவந்தன.

இதில் தொழில்நுட்பம், நிதி மற்றும் உற்பத்தி என துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களும் அடக்கம். சோதனை முயற்சியாக இந்த நடைமுறை தொடங்கப்பட்ட நிலையில், ஆறு மாதங்களில் புதிய மாற்றம் ஏற்பட்டது. 

4 Day Week Global in germany

அதாவது, 45 நிறுவனங்களும் உற்பத்தி திறன் 100%, உழைப்பு 80% மற்றும் ஊதியம் 100% என்பதைக் குறிக்கும் 100-80-100 என்கிற நடைமுறையைப் பின்பற்றியதன் மூலம் அதிக லாபத்தை ஈட்டின.

லாபம் எப்படி சாத்தியமானது?

இந்த நடைமுறையால் உற்பத்தி குறையும், குறிப்பிட்ட காலத்திற்குள் இலக்கை எட்டமுடியாது என்று முதலாளிகள் பலர் அச்சமடைந்தனர்.

ஆனால், தொழிலாளர்களைப் பொறுத்தவரை குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடிந்ததால், அவர்கள் உற்சாகமாக வேலையை செய்தனர்.

அத்துடன் உடற்பயிற்சி, வாசித்தல் போன்ற விடயங்களை செய்து புதிய புதிய யோசனைகளுடன் பணிக்கு திரும்பினர். 

4 Day Week Global in germany

இதன் விளைவாக உற்பத்தி புதிய உச்சத்தை எட்டியது. ஒப்பீட்டளவில், ஆறு நாட்கள் வேலையை விட இந்த 4 நாட்கள் பணி நடைமுறையில் அதிக உற்பத்தியை நிறுவனங்கள் செய்தன.

இன்று என்ன செய்யப்போகிறோம்? என்ன புதிய யோசனை போன்ற விவாதங்கள் தினமும் நடப்பதன்படி வேலை நடக்கும்.

இதன் காரணமாக வேலையில் தொழிலாளர்கள் முழு கவனம் செலுத்தினர். விளைவு? நிறுவனங்களுக்கு வழக்கத்தை விட கிடைத்த அதிக லாபம்.

இதனைத் தொடர்ந்து, 4 நாட்கள் வேலை என்கின்ற நடைமுறையை காலவரையறையின்றி தொடர்வதாக 73 சதவீத நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. 

அமெரிக்க டெக் நிறுவனங்களுக்கு 10 சதவீதம் டிஜிட்டல் வரி விதிக்கவுள்ள ஐரோப்பிய நாடு

அமெரிக்க டெக் நிறுவனங்களுக்கு 10 சதவீதம் டிஜிட்டல் வரி விதிக்கவுள்ள ஐரோப்பிய நாடு

210 நிறுவனங்கள்

உலகம் முழுவதும் இதுபோன்ற முயற்சியை பல நிறுவனங்கள் சோதித்து பார்த்திருக்கின்றன. இதில் 210 நிறுவனங்கள் இன்னும் இதனை தொடர்கின்றன.

ஸ்பெயின், போர்த்துக்கல், அயர்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள நிறுவனங்களும் இதனை தொடர்கின்றன. ஆனால் எல்லா நிறுவனங்களுக்கும் இது பொருந்தாது. 

4 Day Week Global in germany

இதை ஜேர்மனி நிறுவனங்களும் ஒப்புக் கொண்டுள்ளன. பொருளாதார வல்லுநர் கூற்றுப்படி, தொடர்ச்சியான விநியோகத்தை எதிர்கொள்ளும் நிறுவனங்களால் இதை சாத்தியப்படுத்த முடியாது.

ஆயினும், இந்த புதிய நடைமுறை தொழிலாளர்களுக்கு மன நிம்மதியையும், முதலாளிகளுக்கு லாபத்தையும் தருவதை மறுக்க முடியாது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு தொழிலாளி சராசரியாக 10 மணிநேரம் வரை வேலை பார்க்கிறார் என்று ஆய்வுகள் கூறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  

4 Day Week Global in germany

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US