கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து.., 4 நோயாளிகள் பலி
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் தீ விபத்து
கேரள மாநிலம் கோழிக்கோடில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று இரவு 8 மணி அளவில் யுபிஎஸ் இருக்கும் பகுதியில் மின்கசிவால் தீ ஏற்பட்டு புகை பரவியதில் பல நபர்கள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
இதனை அடுத்து வெள்ளிமடுக்குன்னு மற்றும் கடற்கரை நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள், தன்னார்வலர்களின் மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொண்டனர்.
இதனால் அப்பகுதியில் இருந்த 200க்கும் மேற்பட்டோர் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
அவசர சிகிச்சையில் இருந்த நோயாளிகள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர்.
இருப்பினும் புகை காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறலில் சிக்கி 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து எம்.எல்.ஏ., சித்திக், தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் னென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட கல்பேட்டா மெப்படி பகுதியை சேர்ந்த நசீரா(24) உயிரிழந்தார்.
மருத்துவமனையில் தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணி நடக்கிறது, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |