புதுமணத் தம்பதியர் பயணித்த கார்: கால்வாய்க்குள் பாய்ந்ததில் நால்வர் பலி
Four killed, newlywed couple injured as car plunges into canal in Andhra Pradesh: ஆந்திரப்பிரதேசத்தில், திருமண வீட்டார் பயணித்த கார் ஒன்று கால்வாய்க்குள் பாய்ந்ததில் நான்கு பேர் பலியானார்கள்.
ஆந்திராவிலுள்ள திருமலாவிலிருந்து பாபட்லா என்னுமிடம் நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது.
கால்வாய்க்குள் பாய்ந்த கார்
இன்று காலை 6.10 மணியளவில், பெல்லூரு என்னுமிடத்தின் அருகே அந்தக் கார் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

சாலையிலிருந்து விலகி, சுவர் ஒன்றில் மோதிய அந்தக் கார், அருகிலிருந்த கால்வாய்க்குள் கவிழ்ந்துள்ளது.
இந்த பயங்கர விபத்தில், காரை ஓட்டிய ப்ரவீன், காரிலிருந்த வெங்கட் ராவ், சுஜாதா மற்றும் சீதா மஹாலக்ஷ்மி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்கள்.
ஆனால், காரிலிருந்த புதுமணத்தம்பதியர் காயங்களுடன் உயிர் தப்பிவிட்டார்கள், அவர்களுக்கு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.